வேலணை இலந்தைவனம் சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர திருப்பணிச்சபை
வேலணை இலந்தைவனம் சித்திவிநாயகர் ஆலய அறங்காவலர் திரு.பா.மதியழகன் அவர்கள் ஆலயத்தின் திருவிழா உபயகாரர்கள் விசேட பூசைக்குரியவர்கள் ஆலய வழிபடுவோர் ஆகியோரை அழைத்து 05.06.2011ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விநாயக சதுர்த்தி தினத்தில் ஆலய மண்டபத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். திரு. சி.தயாபரன் அவர்களின் தேவார பாராயணத்துடன் கூட்டம் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் இவ்வாலயத்தில் பஞ்சதள இராஜகோபுரமொன்றைத் ஸ்தாபிப்பதற்கு இவ்வழிபடுவோரிலிருந்து ஒரு செயற்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பாகவும், அதனது பணிதொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் இச்செயற்குழுவானது இராஜகோபுரப்பணி நிறைவு பெற்றதும் குழுவின் பணியும் நிறைவு பெறும் என்றும் கூறி செயற்குழு உறுப்பினர்களை தர்மகத்தா நியமிக்க அதனைக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். நியமிக்கப்பட்ட செயற்குழு தொடர்பான விபரம் வருமாறு:-
தலைவர் : திரு பா.மதியழகன் (தர்மகத்தா)
உபதலைவர் : திரு செ.மயூரகிரிநாதன்
: திரு சு.சண்முகதாஸ்
: திரு சு.மகேந்திரன்
செயலாளர் : திரு கோ.முருகதாஸ்
உபசெயலாளர்: திரு சி.செல்வேந்திரன்
பொருளாளர் : திரு ளு.வு மகாலிங்கம்
உறுப்பினர்கள் : திரு சி.கிருபாகரன்
: திரு பொ.ஜெகதீஸ்வரன்
: திரு ம.வேலாயுதநாதன்
: திரு சு.திசைநாயகம்பிள்ளை
: திரு பொ.சிவலிங்கம்
: திரு த.தர்மராஜா
: திரு ஞா.நிரஞ்சன்
: திருமதி கீதா சிங்கராஜா
: திருமதி கலையரசி சதானந்தயோகன்
: திருமதி கௌரி செந்தமிழ்பாலன்
: திரு சி.பஞ்சலிங்கம்
: திரு இ.சிவதாஸ்
: திரு ஜெ.ஜெகநாதன்
: திரு சீ.குமரானந்தா
: திரு வ.நாவேந்தன்
: திரு இ.சுதாகரன்
: திரு தி.திருஞானசம்பந்தன்
: திரு இ.அன்னலிங்கம்
: திரு சோ.பேரின்பநாதன்
: திரு சி.தவராசா
: திரு பா.உதயழகன்
: திரு இ.சபேசன்
இச்செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.
ஆலோசனைக்குழு
திரு கை.மகேந்திரலிங்கம்
திரு க.சட்டநாதன்
திரு அ.சுந்தலிங்கம்
திரு ஆ.இரத்தினசபாபதி
திரு சி.தயாபரன்
திரு செ.சிற்சொரூபன்
திரு இ.சிவநாதன்
திரு செ.சிவபுரநாதன்
திரு கோ.பரமானந்தன்
திரு க.கணேசலிங்கம்
கணக்காய்வாளர் ஒருவரால் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. உள்ளக கணக்காய்வாளராக திருமதி. கலைச்செல்வி நியமிக்கப்பட்டார்.
இச்செயற்குழுவுக்கு ஆலய வழிபடுவோர் குடும்பங்களைச் சார்ந்த வெளிநாடுகளில் வாழ்பவர்களான ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களையும் இக்குழுவோடு இணைப்பு செய்வதற்காக வௌ;வேறு நாடுகளிலும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வருமாறு.
1. கனடா
திரு. செல்வநிதிநாதன்
திரு. ஞா.ஞானகரன்
திரு. த.சௌந்தரராஜன்
திரு. கை.சிவகுமார்
2. பிரித்தானியா
திரு. தா.யோகநாதன்
திரு. செ.குலவீரசிங்கம்
திருமதி அம்பிகை சிவநேசநாதன்
திரு. சு.இந்திரன்
திரு. கே.விமலன்
3. பிரான்ஸ்
திரு. செ.கந்தசாமி
திரு. சு.பாஸ்கரன்
4. ஜேர்மனி
திரு. வே.தர்மசேகரன்
திரு. ச.சோதிலிங்கம்
5. சுவிற்சலாந்து
திரு. வை.ஜெயசீலன்
திரு. அ.பேரின்பநாதன்
திரு. சு.குகனேசநாதன்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அத்தோடு இக்கூட்டத்தில் வருகை தந்த அனைவரது உடன்பாட்டுடன் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எ இப்பஞ்சதள இராஜகோபுரம் ஆரம்பித்து பூர்த்தியடைவதற்கு காலஎல்லையை வரையறுத்து 5 ஆண்டுகள் என தீர்மானிக்கப்பட்டது.
எ இது தொடர்பான போதியளவு விளம்பரங்களை பத்திரிகை மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் வெளியிட்டு ஆலயத்துடன் தொடர்பட்டவர்கள், வழிபடுவோர், ஊர்மக்கள் ஆகியோருக்கு அறியப்படுத்தி இப்பணிக்கான நிதி சேகரித்தல் பணியைத் துரிதப்படுத்தல்.
எ இவ் இராஜகோபுர வேலைத்திட்டத்திற்கான நிதியினை வசதியான முறையில் நிதியீட்டம், செய்வதற்காக ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். என்றும் இவ் வங்கிக் கணக்கை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரில் தலைவருடன் பொருளாளர் அல்லது செயலாளர் ஆகிய இருவரது கையொப்பத்துடனேயே நடைமுறைப்படுத்துவதென்றும் இதற்காக வேலணையில் உள்ள வர்த்தக வங்கியில் இக்கணக்கை ஆரம்ப்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
எ ஆலய தர்மகத்தா பிரபல்யமான சிற்பாசாரியார்களுடன் கலந்து பேசி பெற்றுக்கொண்ட மூன்று கோட்டேசன்கள் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திரு.புருஷோத்தமன் என்பவரால் தரப்பட்ட மதிப்பீடு (நுளவiஅயவந) இப்பணி முழுமையாக நிறைவு செய்ய 22,500,000ஃஸ்ரீ தேவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலும் அத்தோடு இந்த மதிப்பீடு ஏனைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது எமக்குப் பொருத்தமானதாக அமைவதாலும் இதற்குரிய சிற்பாசாரியாhர் தொடர்பான நன்மதிப்பு காரணமாகவும் இவருடைய கோட்டேசனை (மதிப்பீட்டை) செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
எ சிற்பாசாரியாருடன் செயற்குழு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவ் ஒப்பந்தத்தில் இராஜகோபுர ஆரம்பம் முதல் நிறைவு வரையான அனைத்து வேலைகளும் அவர்களாலேயே செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதும் ஒவ்வொரு தளத்திற்குமான நிதி கொடுப்பனவு கால அட்டவணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு புரிந்துணர்வுடனான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தல்.
எ இவ் இராஜகோபுர வேலைத்திட்டத்திற்காக அனைத்து விதமான வருமானங்கள் பணரீதியாக் பொருட்களாக அல்லது சேவையாக கிடைக்கும் அனைத்தும் எவர் மூலமாக வந்தாலும், அது இறுதியாக பொருளாளரிடம் சென்றடைந்து அதற்கான பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்பட்ட வேண்டும் என்றும் இவ் வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்குமான கணக்குகள் பொருளாளரினால் கணக்குப் பதிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அனைத்துக் கொடுப்பனவுகளும் வவுச்சர் மூலமாகவும் கொள்வனவுகள் சிட்டை உடனும் கையாளப்படவேண்டும்.
எ வெளிநாடுகளில் இருக்கும் எமது ஊரவருடன் இங்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர்களுக்கூடாக தொடர்பினை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து நிதி சேகரிப்பை மேற்கொள்ளுதல்.
எ இராஜகோபுர அமைப்பு தொடர்பாக ஏற்கனவே இராஜகோபுரங்களை அமைத்த ஆலய அறங்காவலர்கள் ஆலய நிர்வாகத்தில் பொறுப்பு வகித்தவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்.
எ இச்செயற்குழுவானது ஒவ்வொரு மாதமும் முதல் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பி.ப 2.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் கூடி இப்பணியின் நிலை குறித்து மதிப்பீடு செய்து விவாதித்து ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுப்பது என்றும் இக்கூட்டம் தொடர்பாக செயலாளரினால் ஃ தலைவரினால் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எ இவ் ஆலயத்தின் இராஜகோபுர அமைப்புத் தொடர்பாக முன்னை நாள் தர்மகத்தா அமரர்.கா.த.வேலாயுதபிள்ளை அவர்கள் தனது காலத்தில் இப்பணியை ஆரம்பிப்பது தொடர்பாக சிலருடன் கலந்துரையாடி இப்பணியை முன்னொடுக்க முயன்ற போதும் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலைகள் அதனை நிறைவேற்ற முடியாமல் செய்துள்ளது. அந்த வகையில் கொழும்பு வர்த்தகர் திரு.செ.தம்பிராசா (வுஆடீ) அவர்களுடன் இது தொடர்பாக கதைத்து ஆரம்ப நடவடிக்கையை மேற்கொள்ள இருந்தார். சூழ்நிலைகாரணமாக இது நடைபெறுமுடியாமல் போனதுடன் தற்போது திரு.செ.தம்பிராஜா அவர்களும் இயங்கமுடியாத சூழ்நிலையில் இருப்பதனால் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடி இப்பணிக்கான அவர்களது அனுசரணையையும் பெற்றுக்கொள்ளல்.
எ இந்தப் பணியை முழுமையாக நிறைவேற்ற யாராவது தனித்து முன்வந்தாலும் அல்லது 4, 5 பேர் சேர்ந்து இராஜகோபுரத்தின் பகுதிகளை பொறுப்பேற்று நிறைவேற்ற முன்வந்தாலும் அவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை இச்செயற்குழு செய்து கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இல்லாவிடின் உள்ளுரில் வெளிநாடுகளில் வாழும் ஆலயத்துடன் தொடர்புள்ளவர்களின் நிதி உதவியுடன் இதனை தீர்மானிப்பது என்றும் இதங்கு இன்றைய இந்த நல்ல நாளில் நிதி வரவுக்கணக்கு கொப்பி ஒன்றை ஆரம்பித்து ஆலயத்தின் கணக்கால் சித்தி விநாயகர் பெயரில் 100000ஃஸ்ரீ வரவு வைக்கப்பட்டு இப்பணிக்கான நிதி சேகரிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எ மேற்படி இராஜகோபுர வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்தும் மிகுதி பணத்தினை தர்மத்தா அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எ மேலே கூறப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அமைப்பு விதிகளாக உள்ளடக்கப்பட்டு இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நன்றியுரை:-
ஆலய தர்மகத்தா அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றியையைத் தெரிவித்துக்கொண்டார்.
திரு. சி.தயாபரன் அவர்களின் தேவார பாராயணத்துடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
……………………… …………………………….
தலைவர் செயலாளர்
(பா.மதியழகன்) (கோ.முருகதாஸ்)
No comments:
Post a Comment