இராஜ கோபுர தரிசனத்தை காண வாருங்கள் உறவுகளே! கோபுர திருப்பணியை நிவர்த்தி செய்ய வாருங்கள்முடிந்தவரை தாருங்கள் விநாயகனின் அருள் பெற்று வசந்தமாய் வாழுங்கள். குறைகள் எல்லாம் தீரட்டும் மருத நிழலும் மண் ஒழுங்கை வாசமும்பூவரச வேலியும் புல்லரிக்கவில்லையா?மாறுகரை வேட்டியும் வடம்பிடிக்கும் வேட்கையும்உங்கள் மனதில் எழவில்லையா ? நம் பிள்ளையார்திருப்பணியில் பங்கெடுக்க தயங்காமல் விரந்திடுவீர் . விரைவோம் .இணைவோம் . அருள்பெறுவோம் .விரைந்தோடி வாருங்கள்...
வடம்பிடிப்போம் வாருங்கள் நீங்கள் கல்வி கற்ற நிலங்கள்கல்லெறிந்த மரங்கள் சாய்ந்துறங்கிய தாய்மடிகள்உங்கள் வளவுகள் மாமன் வீடுகள் தாத்தா பாட்டி வீடுகள் மதில் பாய்ந்த நினைவுகள் வயல்வெளிகள் தோட்டங்கள் பற்றைகள்நீச்சல் கற்ற கிணறுகள் கேணிகள் அத்துடன்நீங்கள் தூக்கப் பின்னடித்த பிள்ளையாரின் குதிரை வாகனம்அத்தனையும் காட்டஉங்கள் பிள்ளைகளையும் கூட்டி வாருங்கள்.மலரும் நினைவுகளுடன்உங்களுக்காகக் காத்திருக்கிறோம்விரைவாக அழைப்போம் விரைந்தோடி வாருங்கள் வடம் பிடிப்போம்வாருங்கள்.
இலந்தை வனப்பதி சித்திவிநாயகர் தேவஸ்தானம்
வேலணை வடக்கு வேலணை
